யாழ். சுன்னாகம் ஞானவைரவர் ஆலயத்தில் நாளை திருவாசக முற்றோதல்(Video)

150

யாழ்.சுன்னாகம் புகையிரத நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள ஞானவைரவர் ஆலயத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை(13-01-2019) திருவாசக முற்றோதல் நிகழ்வு சிறப்பாக இடம்பெறவுள்ளது.

வைரவப் பெருமானுக்கு விசேட அபிஷேக பூசைகள் இடம்பெறுவதைத் தொடர்ந்து திருவாசக முற்றோதல் நிகழ்வு ஆரம்பமாகும்.

ஏழாலையைச் சேர்ந்த மூத்த இசை சொற்பொழிவாளர் கலாபூஷணம் க. ந. பாலசுப்பிரமணியம் தலைமையில் திருவாசக முற்றோதல் இடம்பெறும். திருவாசக முற்றோதல் நிறைவு பெற்றதும் மதியம் அடியவர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படும்.

இதேவேளை,மேற்படி திருவாசக முற்றோதல் நிகழ்வில் திருவாசக ஆர்வலர்கள் அனைவரையும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலாபூஷணம் க. ந. பாலசுப்பிரமணியம் கேட்டுள்ளார்.

(எஸ்.ரவி)