யாழ். குப்பிழான் சிவபூமி ஞான ஆச்சிரமத்தில் சிறப்பிக்கப்பட்ட திருவாசக முற்றோதல் (Video)

263

யாழ்.குப்பிழான் சிவபூமி ஞான ஆச்சிரமத்தின் வருடாந்தத் திருவாசக முற்றோதல் நிகழ்வு இன்று சனிக்கிழமை(12-01-2019) சிறப்பாக இடம்பெற்றது.

இன்று அதிகாலை -05.30 மணிக்கு சிவபூமி ஆச்சிரமத்தில் எழுந்தருளியுள்ள விநாயகப் பெருமானுக்கும், சிவலிங்கப் பெருமானுக்கும் விசேட அபிஷேகம் இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து காலை-06 மணிக்கு மணிவாசக சுவாமிகள் அருளிய திருவாசக முற்றோதல் ஆரம்பமானது. இந்த திருவாசக முற்றோதல் நிகழ்வில் நல்லூர் மற்றும் சுதுமலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஓதுவார்கள் கலந்து கொண்டனர்.

அத்துடன் குப்பிழானைச் சேர்ந்த திருவாவடுதுறை ஆதீனப் பிரசாரகர் சைவப்புலவர் ஏ.அனுஷாந்தனும் குறித்த திருவாசக நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் திருவாசகத்தின் மகிமையை உணர்த்தும் வகையில் சிறப்புரையும் ஆற்றினார்.

இந்த திருவாசக முற்றோதல் நிகழ்வில் குப்பிழான் கிராமத்தைச் சேர்ந்த அடியவர்கள் சிலரும் ஓதுவார்களுடன் இணைந்து பக்திபூர்வமாக திருவாசகம் முற்றோதினர்.

பிற்பகல்-01 மணிக்கு திருவாசக முற்றோதல் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து சிவலிங்கப் பெருமானுக்கும், ஆச்சிரமத்தில் எழுந்தருளியுள்ள ஈழத்து இந்தியச் சித்தர்களின் திருவுருவப்படங்களுக்கும் விசேட பூசைகள் இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து திருவாசக முற்றோதல் நிகழ்வில் கலந்து கொண்ட அடியவர்கள் அனைவருககும் மகேஸ்வரபூஜை( அன்னதானம்) பரிமாறப்பட்டது.

{செய்தித் தொகுப்பு மற்றும் காணொளி:- செ.ரவிசாந்-}