ஆட்கடத்தலில் ஈடுபட்ட இலங்கையர்கள் கைது

70

ஆட்கடத்தலில் ஈடுபட்ட மூன்று இலங்கையர்கள் மலேசியப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

24 இலங்கையர்களுடன் மலேசியா ஊடாக அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து நோக்கிப் பயணிப்பதற்கு முற்பட்ட போதே குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

12 ஆண்கள், 8 பெண்கள், 4 சிறுவர்களும் இந்த 24 பேரில் அடங்குகின்றனர்.

ஆட்கடத்தலுக்குப் பயன்படுத்துவதற்காகப் படகொன்று கொள்வனவு செய்யப்பட்டுள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, புகடலிக்கோரிக்கையாளர்களை அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்திற்கு அனுப்புவதற்காக மூன்று படகு இயந்திரங்களைக் கொள்வனவு செய்ய முயற்சிகள் இடம்பெற்றுள்ளமையும் தெரியவந்துள்ளது.