வடக்கு மாகாண முன்னாள் ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள புதிய பதவி! (Photos)

140

வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் குரே தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண சபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்று(11)முற்பகல் இலக்கம்- 25 காலி வீதி கொள்பிட்டியில் அமைந்துள்ள தலைமையகத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளார். இந் நிகழ்வில் கூட்டுத்தாபன் ஊழியர்கள், அவரது நண்பர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்படி நியமனத்தை வழங்கி வைத்துள்ளார்.

வடக்கு மாகாணத்தின் ஆளுநராக பல வருடங்களாகச் செயற்பட்டு வந்த ரெஜினோல்ட் குரே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக சூழ்ச்சியில் ஈடுபட்டு வந்தாரெனக் குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில் அண்மையில் ஜனாதிபதியினால் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

எனினும், தன் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டை ரெஜினோல்ட் குரே அடியோடு மறுத்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.