இலங்கைவாழ் தமிழ் மாணவர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி!!

155

இலங்கையின் அனைத்துத் தமிழ்ப் பாடசாலைகளுக்கும் எதிர்வரும்-14 ஆம் திகதி விசேட விடுமுறை அறிவிக்கப்படவுள்ளது.

தைப்பொங்கல் தினம் எதிர்வரும்-15 ஆம் திகதி வருவதால் எதிர்வரும்-14 ஆம் திகதி திங்கட்கிழமை
வடக்கு மற்றும் கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு தைப்பொங்கல் தினத்துக்கான விசேட விடுமுறையாக அறிவிக்கப்படவுள்ளது.

13 ஆம் திகதி ஞாயிறு தினமாகவும் தைப்பொங்கல் தினமான 15 ஆம் திகதி செவ்வாய்க்கிழமையாகவும் வருவதனால் இந் நிலையை விசேட காரணமாக கருத்தில் கொண்டு எதிர்வரும்- 14 ஆம் திகதி திங்கட்கிழமை இலங்கையின் அனைத்துத் தமிழ்ப் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறையாக அறிவிக்க வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்திடம் விடுத்த வேண்டுகோளை கல்வியமைச்சர் ஏற்றுக்கொண்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.

இதன் காரணமாக இலங்கையின் அனைத்து தமிழ்ப் பாடசாலைகளுக்கும் எதிர்வரும்- 14 ஆம் திகதி விசேட விடுமுறை அறிவிக்கப்படவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.