அப்பாவான சீமான்: குவியும் வாழ்த்துக்கள் (Photo)

261

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும், மறைந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகள் கயல்விழிக்கும் கடந்த- 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ திடலில் திருமணம் நடைபெற்றுள்ளது.

தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கி இவர்களது திருமணத்தை நடத்தி வைத்துள்ளார்.

தமிழுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் சீமானின் திருமணம் தமிழ்முறைப்படி சீர்திருத்த முறையில் நடைபெற்றது. அத்துடன் ‘அ’ என்ற எழுத்துப் பொறிக்கப்பட்ட தாலியை கயல்விழி கழுத்தில் சீமான் அணிவித்தார்.

தற்போது திருமணமாகி ஐந்து ஆண்டுகளான நிலையில் சீமான் – கயல்விழி தம்பதியினருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. சீமான் அப்பாவானதைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இதேவேளை, புத்தாண்டின் ஆரம்பத்தில் சீமானுக்கு கிடைத்த எல்லையில்லா மகிழ்ச்சியை நாம் தமிழர் கட்சியினரும் கொண்டாடி வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது