ஊரே திரண்டு முதலைக்கு இறுதிச் சடங்கு: நெகிழ்ச்சி சம்பவம் (Video)

161

இந்தியாவின் சத்தீஸ்கரில் 130 வருட முதலைக்கு கிராம மக்கள் ஒன்றிணைந்து இறுதிச்சடங்கு செய்திருப்பது பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பொதுவாகவே முதலை என்றால் அது கொடூரமானது. அது மனிதர்களைக் கொல்லும் கொடிய மிருகம் என்று தான் கூறுவர்.

சத்தீஸ்கரிலுள்ள பவமோக்த்ரா கிராமத்திலுள்ள குளத்தில் முதலையொன்று வசித்து வந்தது.

அந்தக் கிராமத்து மக்கள் குளத்தில் குளிக்க சென்றாலும் அந்த முதலை அவர்களைத் தொந்தரவு செய்யாமல் அமைதியாகவிருக்கும். இதனால்,அந்த முதலை மீது ஈர்ப்புக் கொண்ட மக்கள் அதன் மீது பேரன்பு வைத்ததுடன் அதனைப் பாசமாகவும் கவனித்து வந்தனர்.

இந்நிலையில் 130 வயதான அந்த முதலை உடல் நலக்குறைவால் காலமானது.இதனால் கவலையடைந்த கிராம மக்கள் அதற்கு கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செய்தனர். பின்னர் முதலையை அடக்கம் செய்தனர்.

கிராம மக்களின் இந்த செயல் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.