உயர் இரத்த அழுத்தம் குறைய வேண்டுமா?: இதனை செய்யுங்க!! (Photos)

633

இன்று 35 வயதுக்கும் மேற்பட்டவர்கள், அலுவலகத்தில் உயர் பொறுப்பிலுள்ளவர்கள் பலரைப் பாதிப்பது உயர் இரத்த அழுத்தம்.

வேலைப் பளு, மனஅழுத்தம் காரணமாக இரத்த நாளங்களில் செல்லும் இரத்தத்தின் அழுத்தம் அதிகரிக்கின்றது. இதற்கான காரணம், தீர்வு ஆகியவை தொடர்பில் பார்ப்போம்.

முதலில் உயர் இரத்த அழுத்தத்திற்கான எச்சரிக்கை அறிகுறிகள் என்னவெனப் பார்ப்போம்.

மூச்சுவிடுவதில் சிரமம்

உங்களுக்குத் திடீரென்று மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டால் மற்றும் மிகவும் சோர்வாக இருப்பதை உணர்ந்தால் அதுவும் உயர் இரத்த அழுத்தத்திற்கான அறிகுறியாகும்.

மூக்கிலிருந்து இரத்தம் வழிதல்

மூக்கிலிருந்து இரத்தம் அடிக்கடி வழிகிறதா? அதிலும் ஒரு வாரத்தில் பலமுறை மூக்கிலிருந்து இரத்தம் வழிந்தால் அது உயர் இரத்த அழுத்தத்திற்கான அறிகுறி.

ஏனெனில்,அதிகப்படியான இரத்த அழுத்தத்தினால் மூக்குகளிலுள்ள சிறிய இரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டு, இரத்தம் வழிகிறது.

தலைவலி

நாம் சாதாரணமாக நினைத்துப் புறக்கணிக்கும் ஓர் பிரச்சினை தான் தலை வலி. ஏனெனில், இந்தத் தலைவலியானது ஒற்றைத் தலைவலியுடனோ, அல்லது புரையழற்சியுடன் தொடர்புடையதாக இருக்கும் என்பதால் தான். ஆனால் தலைவலியானது திடீரென்று அளவுக்கு அதிகமானால், அது உயர் இரத்த அழுத்தத்திற்கு ஓர் அறிகுறியாகவும் இருக்கும். இதற்கு மூளைக்கு செல்லும் இரத்தத்தின் அளவு குறைந்து உடலின் மற்ற உறுப்புகளுக்கு இரத்தம் வேகமாக அழுத்தப்படுவது காரணமாகும்.

மங்கலான பார்வை

தலைச்சுற்றல் அல்லது மங்கலான பார்வை கூட உயர் இரத்த அழுத்தத்துடன் தொடர்புடையவை. மேலும் மங்கலான பார்வையினால் கண் மருத்துவரை சந்தித்து பரிசோதித்து எந்தவொரு பிரச்சினையும் தெரியாவிட்டால் உடனே இரத்த அழுத்தப் பரிசோதனையை மேற்கொள்ளுங்கள்.

வேகமான இதயத் துடிப்பு

சாதாரணமாக சிறிது தூரம் நடந்தாலோ அல்லது எடையுள்ள பொருட்களை தூக்கினாலோ, மாடிப் படிக்கட்டுக்கள் ஏறினாலோ, அளவுக்கு அதிகமாக மூச்சு வாங்கினால் உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் என்று அர்த்தம்.

அத்துடன் பதற்றம் மயக்க உணர்வு, கவனமின்மை, அளவுக்கு அதிகமான சோம்பேறித்தனம் போன்றவையும் உயர் இரத்த அழுத்தத்திற்கான அறிகுறியே.

உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க கடைப்பிடிக்க வேண்டியவை

ஹைபர் டென்ஷன் எனும் இந்த நோய் பல்வேறு நோய்களுக்கு காரணமாக அமைகிறது. மாரடைப்பு, வாதம் போன்றவை வருவதற்கான அறிகுறியாக உயர் இரத்த அழுத்தம் அமைந்துள்ளது.

ஆகவே, இரத்த அழுத்தத்தை சரியான விகிதத்தில் வைத்து கொள்வதற்கு சீரான உணவு கட்டுப்பாடும், மருந்துகளும் முக்கியம்.

இன்றைய உணவுகளில் பல இந்த நோயை அதிகரிக்கச் செய்யும் வாய்ப்புக்கள் காணப்படுவதால் இரத்தக் கொதிப்பிலுள்ளவர்கள் கட்டாயமாக சில உணவுகளைத் தவிர்க்கவேண்டும். அவற்றைப் பற்றிய தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

வாருங்கள்…. அவை என்னென்ன என்பதைத் தெரிந்து கொள்வோம்.

இரத்தக் கொதிப்பு உள்ளவர்களது முக்கிய எதிரி கப்பைன், நிக்கோட்டின் மற்றும் ஆல்க்கஹால். காஃபி, டீ உள்ளிட்ட பானங்களை உற்சாகம் பெற அவ்வப்போது அருந்துவது இரத்த அழுத்தத்தையும் அதிகரிக்கிறது. இப் பழக்கத்தை முடிந்தவரை குறைப்பது நல்லது. சிகரெட்டிலுள்ள நிக்கோட்டின் ஒவ்வொரு முறை சிகரெட் புகைக்கும் போதும் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது.

மதுவிலுள்ள ஆல்கஹால் கல்லீரல் பாதிப்பு ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் இரத்த அழுத்தத்தையும் அதிகரிக்கிறது.

40 வயதுக்கு மேல் உணவில் கொழுப்பு, உப்பு, கரம், சர்க்கரை அனைத்தையுமே குறைப்பது நல்லது. குறிப்பாக உப்பின் அளவைக் குறைத்துக் கொள்வது நல்லது.

உயர் இரத்த அழுத்தமுள்ளவர்கள் அதிகமான உப்பை எடுத்துக் கொள்ளும்போது உப்பிலுள்ள சோடியம் உடலின் சிறுநீரகம், இதயம், தமனிகள், மூளை போன்றவற்றைப் பாதிக்கிறது.

இரத்த அழுத்தம் உயரும் போது தமனிகளில் அழுத்தம் அதிகமாகி அவற்றைக் குறுக்கி விடுகிறது அல்லது வெடிக்கச் செய்கிறது.

சில நேரங்களில் அதிக அளவு சோடியம் உட்கொள்ளல் இதயத்திற்கு இணையும் இரத்தக் குழாய்கள் அதிகமான சோடியம் உட்கொள்ளளால் பாதிப்படைகிறது.

ஆரம்பத்தில் இதயத்திற்குச் செல்லும் இரத்த ஓட்டத்தை குறைக்கிறது. இதனால், மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு உண்டாகிறது. ஒரு மனிதன் ஒரு நாளில் சராசரி 2.5 மில்லி கிராம் அளவு உப்பு மட்டுமே சேர்த்துக் கொள்ள வேண்டும்.