ஆரம்பமாகிறது காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தித் திட்டம்! (Photos)

347

இந்தியாவின் நிதியுதவியுடன் காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தித் திட்டம் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்தியாவின் 45.27 மில்லியன் டொலர் நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்படவுள்ள குறித்த திட்டம் மூன்று ஆண்டுகளில் நிறைவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இலங்கை கடற்படையின் வசமுள்ள காங்கேசன்துறைத் துறைமுகம் இந்தத் திட்டத்தின் மூலம் சரக்குகளைக் கையாளக் கூடிய துறைமுகமாக மாற்றப்படும்.

அடுத்த மாத ஆரம்பத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க,துறைமுகங்கள் கப்பல்துறை அமைச்சர் சாகல ரத்நாயக்க மற்றும் மூத்த அதிகாரிகள் மேற்படி திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர்.

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் ஏற்றுமதி,இறக்குமதித் துறைக்கு உதவியாகவிருப்பதுடன் நாட்டின் பொருளாதாரத்திலும் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும். அத்துடன் பிரதேசத்தின் உட்கட்டமைப்பு வசதிகளும் பெருமளவு நேரடி மற்றும் மறைமுகத் தொழில்வாய்ப்புக்களும் கிடைக்குமென அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.