வெற்றிகரமாக ஏவப்பட்டது ஜிசாட்-31! (Video)

527

பிரான்ஸ் நாட்டின் கயானாவிலிருந்து ஜிசாட்-31 என்ற செயற்கைக் கோளை இன்று(06) அதிகாலை இஸ்ரோ விஞ்ஞானிகள் விண்ணில் வெற்றிகரமாக ஏவியுள்ளனர். விண்ணில் பறந்த சில நிமிடங்களிலேயே செயற்கைக்கோள் செயற்பட்டதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

தகவல் தொடர்பு வசதிகளை அதிகரிக்கும் வகையில் செலுத்தப்பட்ட இந்த ஜிசாட்-31 என்ற
செயற்கைக்கோள் ஐரோப்பிய ராக்கெட்டான ஏரியன்- 5 மூலம் ஏவப்பட்டது.

இதன் எடை 2,535 கிலோ ஆகும். மேலும் இதன் ஆயுட்காலம் 15 ஆண்டுகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஜிசாட் செயற்கைக்கோள் விசாட் நெட்வொர்க், டெலிவிஷன் இணைப்பு, டிஜிட்டல் செய்தி சேகரிப்பு, டி.டி.எச். டெலிவிஷன் சேவை, செல்போன் சேவை ஆகியவற்றுக்கும் பயன்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை-02.31 மணியளவில் குறித்த செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டதைத் தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.