யாழ்.குப்பிழான் விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி நாளை வெள்ளிக்கிழமை(08-02-2019) பிற்பகல்-01 மணி முதல் குப்பிழான் கற்கரைக் கற்பக விநாயகர் ஆலயத்திற்கு அண்மையில் அமைந்துள்ள விக்னேஸ்வரா விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
வித்தியாலய முதல்வர் க.காராளசிங்கம் தலைமையில் இடம்பெறவுள்ள மேற்படி நிகழ்வில் வலிகாமம் கல்வி வலய கல்வி முகாமைத்துவ பிரதிக் கல்விப் பணிப்பாளர் சி. மதியழகன் பிரதம விருந்தினராகவும்,வவுனியா தெற்கு கல்வி வலயத்தின் ஆரம்பக் கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் சி. முரளிதரன் சிறப்பு விருந்தினராகவும்,பலாலி வடக்கு அ. த. க பாடசாலையின் அதிபர் திருமதி- சி.சுகுமார் கெளரவ விருந்தினராகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதேவேளை,மேற்படி இல்ல மெய்வல்லுநர் போட்டி நிகழ்வுகளில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு வித்தியாலய சமூகத்தினர் கேட்டுள்ளனர்.
(எஸ்.ரவி-)