அமோக வெற்றியைப் பதிவு செய்தது குப்பிழான் குறிஞ்சிக்குமரன் அணி!

228

‘BEES SPORTS’ அனுசரணையில் யாழ்.லீக்கின் அனுமதியுடன் நாவாந்துறை கலைவாணி விளையாட்டுக் கழகம் மாவட்ட ரீதியில் நடாத்தி வரும் தொடரில் குப்பிழான் குறிஞ்சிக்குமரன் அணி இரண்டாவது சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.

நேற்று முன்தினம்(06) இடம்பெற்ற ஆட்டமொன்றில் குப்பிழான் குறிஞ்சிக்குமரன் அணியை எதிர்த்து கொக்குவில் பொற்பதி அணி மோதியது.

குறித்த போட்டியில் 06:01 என்ற கோல் கணக்கில் குறிஞ்சிக்குமரன் அணி வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்குத் தகுதி பெற்றது.

குறிஞ்சிக்குமரன் அணி சார்பாக ரிதுசன்-03 ,கஜேந்திரன்- 02, பாஸ்கி- 01 ஆகியோர் கோல்களை பெற்றுக் கொடுத்தனர்.

இதன் மூலம் மேற்படி தொடரில் குப்பிழான் குறிஞ்சிக்குமரன் அணி அமோக வெற்றியைப் பதிவு செய்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.