கிளிநொச்சியில் போதை ஒழிப்புப் பிரிவு பொலிஸார் அதிரடி: இளைஞன் கைது! (Photo)

229

யாழ்.கிளிநொச்சி புளியம் பொக்கணைப் பிரதேசத்தில் நாலு கோடா பரல் கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்தி உபகரணங்களுடன் 16 வயது இளைஞனொருவன் இன்று(10) காலை கிளிநொச்சி மாவட்ட போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளான்.

கிளிநொச்சி மாவட்ட போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்.ஐ.சதுரங்க தலைமையிலான பொலிஸ் குழுவினரால் மேற்படி கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைதான இளைஞனை விசாரணைகளின் பின்னர் நாளைய தினம்(11) நீதிமன்றத்தில் முற்படுத்தப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை,மேற்படி பிரதேசத்தில் கசிப்பு உற்பத்தி அண்மைக் காலமாக அதிகரித்துள்ள நிலையில் அதனைக் கட்டுப்படுத்துவதற்கு கிளிநொச்சி மாவட்ட போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவுப் பொலிஸார் தீவிர நடவடிக்கை முன்னெடுத்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

(கிரி-)