வடமாகாண கல்வித் துறையில் பாலியல் துன்புறுத்தல்கள்: ஆளுநரின் முக்கிய நடவடிக்கை!!

169

வடக்கு மாகாணக் கல்வித் துறையில் பெண்களுக்கெதிராக இடம்பெற்று வரும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்காக குறைகேள் விசாரணைக் குழுவை அமைக்க வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி- சுரேன் ராகவன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

மூன்று பேர்களை உள்ளடக்கிய குறித்த விசாரணைக் குழுவில் இரு பெண்களும் உள்ளடக்கப்பட்டுவர்.

வட மாகாணத்தில் கல்வித் துறையில் கடமையாற்றும் பெண்கள் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்படுவது தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநரிற்கு அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று வருவதையடுத்தே வடக்கு மாகாண ஆளுநர் குறைகேள் விசாரணைக் குழுவை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிய வருகிறது.

{தமிழின் தோழன்-}