முல்லைத்தீவு – திருகோணமலையை இணைக்க கடல்நீரேரியில் பாலம்!

169

முல்லைத்தீவு– திருகோணமலை மாவட்டங்களை இணைக்கும் வகையில் கொக்கிளாய் கடல்நீரேரிக்கு மேலாகப் பாலம் அமைக்கப்படவுள்ளது.

Print

ஒன்பது பில்லியன் ரூபா செலவில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள குறித்த பாலத்துக்கான நிதியை செக் குடியரசின் CSOB வங்கியும், உள்ளூர் வணிக வங்கியொன்றும் வழங்கவுள்ளன.

மூன்று மாதங்களுக்குள் பாலம் அமைக்கும் பணிகள் நிறைவு செய்யப்படுமென வீதி அபிவிருத்தி அதிகார சபையின் திட்டப் பணிப்பாளர் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

ஒரு கிலோ மீற்றர் நீளம் கொண்டமேற்படி பாலத்தை நிர்மாணிப்பதன் மூலம் முல்லைத்தீவிலிருந்து புல்மோட்டைக்கு இடையிலான பயணத் தூரம் நூறு கிலோ மீற்றரினால் குறைவடையுமென எதிர்பார்க்கப்படுகிறது.