கூட்டமைப்பின் தலைவராகிறார் சுமந்திரன்!

198

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் அடுத்த தலைவராக சுமந்திரனை தெரிவு செய்வது தொடர்பாக கூட்டமைப்பின் உயர்மட்டக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படவுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் முதுமையினாலும், உடல்நலக் குறைவினாலும் தமது பொறுப்புக்களை நிறைவேற்றுவதில் உடலளவில் சிரமப்பட்டு வரும் நிலையிலேயே கூட்டமைப்பின் புதிய தலைவராக எம்.ஏ.சுமந்திரனை நியமிக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கூட்டமைப்பின் அடுத்த தலைவராக நியமிப்பதற்குத் தேவையான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதை நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனும் உறுதிப்படுத்தியுள்ளார். அடுத்த உயர்மட்டக் கூட்டத்தில் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுமெனவும் அவர் கூறியுள்ளார்.

சம்பந்தன் மிகச் சிறந்த தலைவர். ஆனால்,அவரது உடல்நிலை நன்றாக இல்லை. இதனால்,அவர் கட்சியின் காப்பாளராக இருக்க வேண்டுமென உறுப்பினர்கள் விரும்புகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.