யாழ். தெல்லிப்பழையில் இன்று சிறப்பு சொற்பொழிவு

159

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை வீமன்காமம் ஞான வைரவர் ஆலய மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நடாத்தப்படும் சிறப்புச்சொற்பொழிவு இன்று திங்கட்கிழமை(11)காலை-10 மணியளவில் ஆலய பிரதான மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இதன்போது சைவப்புலவர் சிவநெறிச்செம்மல் செ.த.குமரன் “கிரியைகள் உணர்ந்து வாழ்வியல்” எனும் தலைப்பில் உரையாற்றுவார்.

மேற்படி சொற்பொழிவை கேட்டுப் பயன்பெற அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை,சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கம் மேற்படி சொற்பொழிவுக்கான ஒழுங்கமைப்பை மேற்கொண்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.