யாழ். புன்னாலைக்கட்டுவனில் 60 சிறுவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் (Photos)

220

யாழ்.கோண்டாவில் கிழக்கு அற்புதநர்த்தன விநாயகர் சனசமூக நிலையம் மற்றும் குமரன் விளையாட்டுக்கழகம் இணைந்து உயர்த்தும் கரங்கள் திட்டத்தின் மூலம் புன்னாலைக்கட்டுவன் கலையெழில் சிறுவர் கழகத்தைச் சேர்ந்த 60 சிறுவர், சிறுமிகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கியுள்ளனர்.

இதற்கான நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை(10) யாழ். புன்னாலைக்கட்டுவன் வடக்கு நரசிங்க வைரவர் ஆலய அறநெறிப் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.

இதேவேளை, எமது கழகத்தை சேர்ந்த 60 சிறுவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கியதை இட்டு எமது சிறுவர் கழகம் சார்பாகவும்,நரசிங்க வைரவர் அறநெறி பாடசாலை சார்பாகவும் கோண்டாவில் கிழக்கு அற்புதநர்த்தன விநாயகர் சனசமூக நிலையம் மற்றும் குமரன் விளையாட்டுக் கலகத்தினருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக புன்னாலைக்கட்டுவன் கலையெழில் சிறுவர் கழக நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

(எஸ்.ரவி-)