சென்னைக்கு அருகே திடீர் நில அதிர்வு!

185

சென்னைக்கு அருகே வங்கக் கடலில் இன்று(12) காலை லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.இந்த அதிர்வு தமிழகத்தில் கேளம்பாக்கம், சைதாப்பேட்டை,டைடல் பார்க்,தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் உணரப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலநடுக்கம் 2 முதல் 3 நொடிகள் வரை உணரப்பட்டுள்ளது.

இந்திய நேரப்படி காலை-07.02 நிமிட அளவில் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் சென்னைக்கு கிழக்கே வடகிழக்கே சுமார்- 600 கிலோ மீற்றர் தொலைவில் கடல் மட்டத்திற்கு கீழ் 10 கிலோ மீற்றர் ஆழத்தில் நிலநடுக்கம் நிகழ்ந்துள்ளது.

இன்று காலை ஏற்பட்ட நில அதிர்வால் சென்னைக்கு எந்தவிதப் பாதிப்புமில்லை என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்று காலை இந்திய நேரப்படி 7.02 நிமிடமளவில் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் சென்னைக்கு கிழக்கே வடகிழக்கே சுமார்- 600 கிலோ மீற்றர் தொலைவில் கடல் மட்டத்திற்கு கீழ் 10 கிலோ மீற்றர் ஆழத்தில் நிலநடுக்கம் நிகழ்ந்துள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகியுள்ளது. இதன் அதிர்வுகள் வடக்கு அந்தமான், சென்னை மற்றும் போர்ட்பிளேர் பகுதிகளிலுள்ள நிலநடுக்கக் கருவிகளில் பதிவாகியுள்ளன.

இதனைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. வங்கக்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சென்னைக்கு எந்தவிதப் பாதிப்புமில்லை.

கடல் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டமையால் நிலப் பகுதிக்குப் பாதிப்புக்கள் எதுவுமில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.