தயாசிறி ஜெயசேகர எம்.பிக்கு திடீர் மாரடைப்பு!

171

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜெயசேகரவுக்குத் திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ள நிலையில் சிறி ஜெயவர்த்தனபுர தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று(12)பிற்பகல் அவருக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இந்நிலையில் மேற்படி வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து அவருக்கு வைத்திய சோதனைகள் நடாத்தப்பட்டுத் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.