சிவத்தமிழ் வித்தகரின் இறுதியாத்திரை விபரம்

359

யாழ்.குப்பிழானைப் பிறப்பிடமாகவும்,கோண்டாவில் கிழக்கை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட ஈழத்து அறிஞர் சிவசுப்பிரமணியம் மகாலிங்கம்(சிவமகாலிங்கம்)இன்று புதன்கிழமை(13) காலமானார்.

கடந்த பல நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்த சிவத்தமிழ் வித்தகர் சிவமகாலிங்கம் பிரபல தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருந்தார்.இந்நிலையில் இன்று(13)அதிகாலை கோண்டாவிலில் அவர் காலமானார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை(15-02-2019) பிற்பகல்-02 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்றுப் பூதவுடல் தகனக் கிரியைகளுக்காக குப்பிழான் காடகடம்பை இந்துமயானத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுமென குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இறுதி யாத்திரை தினமான நாளை மறுதினம் குப்பிழான் தெற்கில் அமைந்துள்ள விவசாய சம்மேளன கட்டடத்தில் சிவத்தமிழ் வித்தகர் சிவமகாலிங்கத்தின் பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு நினைவஞ்சலி உரைகளும் நடைபெறும்.