ஈழத்து அறிஞர் சிவத்தமிழ் வித்தகர் சிவமகாலிங்கம் காலமானார்

764

ஈழத்து அறிஞர் சிவத்தமிழ் வித்தகர் சிவமகாலிங்கம் இன்று(13)அதிகாலை யாழ். கோண்டாவில் பொற்பதி வீதியிலுள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

யாழ்.குப்பிழானைப் பிறப்பிடமாக கொண்ட சிவத்தமிழ் வித்தகர் சிவமகாலிங்கம் காலமாகும் போது அவருக்கு 70 வயது.

பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் முன்னாள் விரிவுரையாளரான இவர் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஓய்வுநிலை உதவிப் பணிப்பாளருமாவார்.

திருமந்திரத்தில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற இவர் பல்வேறு ஆலயங்களிலும் சமய சொற்பொழிவுகளும் ஆற்றியுள்ளார். இவரது சமய சொற்பொழிவுகள் தனித்துவமானவை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.