கருவிலிருக்கும் குழந்தைக்கு ஆப்ரேசன்: சாதனை படைத்த வைத்தியர்கள்!! (Photo)

153

முதுகுத்தண்டு ஆப்ரேஷன் என்பது அதிக ரிஸ்கான ஆபரேசன் எனக் கருதப்படும் நிலையில் இந்த ஆரேசனை தாயின் கருவிலுள்ள சிசுவிற்கு இங்கிலாந்து வைத்தியர்கள் மேற்கொண்டு சாதனை படைத்துள்ளனர்.

இங்கிலாந்து நாட்டின் எஸ்ஸெக்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் பீதன் சிம்ப்சன் என்ற பெண்.சமீபத்தில் கர்ப்பமான நிலையில் அவர் தனது வயிற்றிலிருக்கும் சிசுவின் வளர்ச்சியைக் கண்டறிய ஸ்கேன் செய்து பார்த்தார்.அவரது வயிற்றிலுள்ள 20 வார சிசுவுக்கு தலைப்பகுதி சரியாக இல்லாததை மருத்துவர்கள் இந்த ஸ்கேன் மூலம் கண்டுபிடித்தனர்.

முதுகுத்தண்டுப் பிரச்சினையால் தான் சிசுவின் தலைப்பகுதி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்தக் குழந்தை பிறந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாகவும் தெரியவந்தமையால் அடுத்த கட்ட சிகிச்சை தொடர்பில் வைத்தியர்கள் குழு ஆலோசனை நடாத்தியது.

இந்த நிலையில் வைத்தியர்கள் குழு தீவிர ஆலோசனை செய்து சிசுவைத் தாயின் கருப்பையிலிருந்து வெளியே எடுத்து முதுகுத்தண்டு ஆப்ரேசன் செய்து மீண்டும் கருப்பைக்குள் வைக்க முடிவு செய்தனர்.

இதற்கு பீதன் சிம்ப்சன் ஒப்புக்கொண்டதையடுத்து சிசுவுக்கு ஆப்ரேசன் செய்து மீண்டும் வெற்றிகரமாக கருப்பையில் வைத்துச் சாதனை புரிந்தனர்.

இனி அந்தக் குழந்தை எந்தவித பிரச்சினையுமில்லாமல் தாயின் கருப்பையில் வளர்ந்து சரியான நேரத்தில் பிறக்குமென வைத்தியர்கள் தெரிவித்தனர்.