ஜெயலலலிதாவின் வரலாறு திரைப்படமாகிறது! (Photos)

தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்திற்குத் தலைவி என்ற பெயா் சூட்டப்பட்டுள்ளது.

அதிமுக கட்சிக்கு பொதுச் செயலாளராகவும்,தமிழக முதல்வராகவும் இருந்தவர் ஜெயலலிதா.அவரது மறைவுக்குப் பின்னர் அவரது வாழ்க்கை வரலாற்றைப் படமாக்கப் பலரும் முயற்சி செய்து வருகிறார்கள். இதற்கான முயற்சிப் பட்டியலில் இயக்குநர் பாரதிராஜா,விஜய் மற்றும் ப்ரியதர்ஷினி ஆகியோர் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் இன்றைய தினம்(24)ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு விஜய் இயக்கவுள்ள ஜெயலலிதாவின் பயோபிக் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

‘தலைவி’எனப் பெயரிடப்பட்டுள்ள இப் படத்துக்கு ‘பாகுபலி’ கதாசிரியர் விஜயேந்திர பிரசாத் இணை கதாசிரியராக பணி புரியவுள்ளார். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.