சிவத்தமிழ் வித்தகரின் நினைவேந்தலும் நூல் வெளியீடும்

160

கடந்த பெப்ரவரி மாதம்-13 ஆம் திகதி யாழ்.கோண்டாவிலில் காலமான ஈழத்து அறிஞர் சிவத்தமிழ் வித்தகர் சிவமகாலிங்கத்தின் நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும்- 24 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயச் சூழலில் இடம்பெறவுள்ளது.

காலை-09 மணியளவில் மங்கல விளக்கேற்றலுடன் நினைவேந்தல் நிகழ்வு ஆரம்பமாகும். காலை-09.20 மணி முதல் முற்பகல்-10 மணி வரை சிவத்தமிழ் வித்தகர் தொடர்பான பல்வேறு நினைவுரைகள் இடம்பெறும்.

அதனைத் தொடர்ந்து முற்பகல்-10 மணி முதல் 11 மணி வரை “பண்ணிசை மாலை” நிகழ்வுகள் நடைபெறும்.

தொடர்ந்து முற்பகல்- 11 மணி முதல் நண்பகல்-12 மணி வரை சிவத்தமிழ் வித்தகரின் வரலாறு மற்றும் அவரின் தனித்துவ ஆளுமைகளை வெளிப்படுத்தும் வகையிலான “சிவத்தமிழ் வித்தகம்” நூல் சம்பிராதயபூர்வமாக வெளியிட்டு வைக்கப்பட்டு உரைகள் நிகழ்த்தப்படும்.

நூல் வெளியீட்டைத் தொடர்ந்து நண்பகல்-12 மணியளவில் மதிய உபசாரம் ஆரம்பமாகும்.

{செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்-}