இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? – (12.03.2019)

65

இன்று எடுத்த வேலையைச் சிறப்பாகச் செய்து முடித்து நற்பெயர் பெறுவீர்கள்.அதே நேரத்தில் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும்.குடும்பத்தில் கணவன்- மனைவி குடும்ப ஒற்றுமையில் அனுகூல பயன்கள் உண்டாகும். மாணவர்கள் கவனத்தைச் சிதறவிடாமல் மிகவும் நன்கு கவனித்துப் பாடங்களைப் படிப்பது நல்லது. சக மாணவர்களுடன் அனுசரித்துச் செல்வது நன்மை தரும்.
அதிர்ஷ்ட நிறம்:- மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்:- 1, 6, 9

இன்று மன அமைதி உண்டாகும். எதிலும் நற்பலன் கிடைக்கும். திட்டமிட்டுச் செயலாற்றுவதிலும் உறுதியான முடிவு எடுப்பீர்கள். வாக்கு வன்மையால் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பாராத திடீர் செலவு உண்டாகலாம். அடுத்தவர் கூறுவதைத் தவறாகப் புரிந்து கொண்டு பின்னர் வருத்தப்படும் சூழ்நிலை ஏற்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்:- மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்:- 2, 6, 9

இன்று கடவுள் பக்தி அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கல், சொத்து வாங்குவது ஆகியவற்றில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்திலிருந்த போட்டி நீங்கும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள்ளிருக்கும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை. சக மாணவர்களிடம் சுமுகமாக அனுசரித்துச் செல்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்:- மஞ்சள், பச்சை, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்:- 5, 9

இன்று பல வகையிலும் நற்பலன்கள் நடைபெறும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு மறைமுகப் பிரச்சினைகள் தீரும். தொடங்கிய வேலை திட்டமிட்டபடி செய்ய முடியாமல் இழுபறியாகவிருக்கும். குடும்பத்திலிருப்பவர்கள் நீங்கள் கூறுவதை ஏற்காமல் தங்களது விருப்பப்படி எதையும் செய்வார்கள்.
அதிர்ஷ்ட நிறம்:- வெள்ளை, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்:- 1, 2, 7

இன்று தெய்வபக்தி அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். கணவன்- மனைவிக்கிடையே ஒற்றுமை காணப்படும். பிள்ளைகளுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். அடுத்தவர் கூறும் கருத்துக்களை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் அதிலுள்ள நல்லது கெட்டதை யோசிப்பது நல்லது. பண விவகாரங்களில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்:- வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்:- 1, 3, 5

இன்று மனதில் சுய நம்பிக்கை அதிகரிக்கும். எதிலும் கவனமாகப் பேசுவது நல்லது. வீண் பழி உண்டாகலாம். எதையும் நன்கு யோசித்துப் பின்னர் செய்வது நன்மை தரும். மாணவர்கள் நிதானமாக ஆழ்ந்த கவனத்துடன் பாடங்களைப் படிப்பது நல்லது. மனக் கஷ்டம், பணக் கஷ்டம் நீங்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்:- வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்:- 3, 6, 9

இன்று மனத் தெளிவு உண்டாகும். எந்தவொரு காரியத்தையும் செய்து முடிக்கும் திறமை அதிகரிக்கும். வயிற்றுக் கோளாறு உண்டாகலாம். பணவரத்துக் கூடும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். ஆன்மீக நாட்டம், தெய்வ பக்தி அதிகரிக்கும். கூட்டுத் தொழில், வியாபாரத்திலிருப்பவர்கள் பார்ட்னர்களுடன் சுமூகமான முறையில் அனுசரித்துச் செல்வது நல்லது
அதிர்ஷ்ட நிறம்:- ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்:- 1, 3, 5, 9

இன்று பண வரவு சிறிது தாமதப்பட்டாலும், கைக்கு வந்து சேரும். தொழில் வியாபாரத்தில் இலாபம் கூடும். ஏற்றுமதி சிறக்கும். எதிர்பார்த்த நிதியுதவி கிடைக்கும். பழைய பாக்கி வசூலாகும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். மேலதிகாரிகளின் பாராட்டுக் கிடைக்கும். வீண் அலைச்சல் உண்டாகலாம்.
அதிர்ஷ்ட நிறம்:- பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்:- 2, 5, 7

இன்று விசேட நிகழ்ச்சிகளில் குடும்பத்தினருடன் கலந்து கொள்ள நேரிடும். கணவன்- மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகளின் உடல்நிலையில் கவனம் தேவை. மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் உண்டாகும். பாடங்களைக் கவனமாகப் படிப்பது முன்னேற்றத்துக்கு உதவும்.
அதிர்ஷ்ட நிறம்:- வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்:- 1, 3, 5

இன்று எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. திறமையாகச் செயல்பட்டு காரிய வெற்றி காண்பீர்கள். மதிப்பும், மரியாதையும் கூடும். மாணவர்கள் கல்வியில் சிரமப்பட்டு முன்னேற்றம் காண வேண்டியிருக்கும். மனோதைரியம் கூடும். குடும்பத்திலிருப்பவர்கள் உங்களுடன் அனுசரித்துச் செல்வார்கள்.
அதிர்ஷ்ட நிறம்:- இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்:- 3, 6, 9

இன்று மனோ தைரியம் கூடும். எதிர்ப்புக்கள் விலகும். எந்தவொரு சூழ்நிலையையும் அனுசரித்துச் செல்வீர்கள். வீண்குழப்பம், காரியத் தடை ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் செல்லும் போது கூடுதல் கவனம் தேவை. பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும். கவனத் தடுமாற்றம் உண்டாகலாம். பணவரத்துத் தாமதப்படும்.
அதிர்ஷ்ட நிறம்:- ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்:- 1, 3, 5, 9

இன்று தொழில் வியாபாரத்தில் சீரான நிலை காணப்படும். எதிர்பார்த்தபடி ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகலாம். அரசாங்கம் தொடர்பான காரியங்களில் மெத்தனப் போக்கு காணப்படும்.உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு விருப்பமற்ற இடமாற்றம் உண்டாகலாம்.சகோதரர்கள் மூலம் நன்மை உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்:- மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்:- 1, 3, 9