யாழில் வறிய எழுத்தாளர்களை ஊக்குவிக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை!

68

வறுமைக்கோட்டுக்குட்பட்ட எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் நோக்குடன் அவர்களின் ஆக்கங்களைப் பதிப்பித்து வெளியிடும் பொருட்டு வடக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் நல்லூர் பிரதேச செயலகம் நிதியுதவி வழங்கவுள்ளது.

ஆகவே, நல்லூர் பிரதேச செயலகத்துக்குட்பட்ட எழுத்தாளர்கள் தமது ஆக்கங்களுடனும் தத்தமது கிராம அலுவலரின் வருமானம் தொடர்பான பரிந்துரையுடனும் தங்கள் விண்ணப்பங்களை எதிர்வரும்-30 ஆம் திகதிக்கு முன்னதாக பிரதேச செயலக கலாசார பிரிவில் சமர்ப்பிக்குமாறு நல்லூர் பிரதேச செயலர் திருமதி-ஏ.அன்ரன் யோகநாயகம் கேட்டுள்ளார்.

(எஸ்.ரவி-)