சிலரின் சொத்தாக மாறியது கூட்டமைப்பு!!

169

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஒரு சிலரின் சொத்தாக மாறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா சாடியுள்ளார்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்புத் தொடர்பில் நேற்றைய தினம்(13) நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

TNA இன்று SNA ஆக மாறியுள்ளது. இது சம்பந்தனின் தேசிய இராணுவமாகும். அவ்வாறு இல்லாவிடின் சுமந்திரனின் தேசியக் கட்சியாக மாறியுள்ளது. தமிழ்பேசும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களால் தமது மக்களுக்காக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளைத் தீர்க்க முடியாமற் போயுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் காரணமாக அந்தக்கட்சி ஓர் இருவரின் சொத்தாக மாறியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.