யாழில் வாள்வெட்டுக் குழுக்களின் பாதுகாப்பில் யுவதி: திடுக்கிடும் காரணம் வெளியானது!!

482

யாழில் இயங்கி வரும் தனியார் பயண ஒழுங்கமைப்பு நிறுவனத்தில் உயர் பதவியில் கடமையாற்றிய யுவதியொருவர் பாரிய நம்பிக்கை நிதி மோசடி செய்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் தற்போது தலைமறைவாகியுள்ளதாக எமது யாழ்.மாவட்ட விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மேற்படி குற்றச்சாட்டுக்கள் காரணமாக குறித்த யுவதி மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், யாழ்.குடாநாட்டிலுள்ள பல்வேறு பொலிஸ் பிரிவுகளிலும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

மேற்படி யுவதியின் செயற்பாடு காரணமாகப் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்த நிலையில் தலைமறைவாகியுள்ள யுவதியைப் பொலிஸார் வலை வீசித் தேடி வருகின்றனர்.

வாள்வெட்டுக் குழுக்களின் பாதுகாப்பில் யுவதி!

தலைமறைவாகியுள்ள மேற்படி யுவதி தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக வாள்வெட்டுக் குழுக்களின் பாதுகாப்பிலிருப்பதாக திடுக்கிடும் தகவலொன்று வெளியாகியுள்ளது.

இதன் காரணமாக குறித்த யுவதியை உடனடியாகக் கைது செய்வதில் பொலிஸாருக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

{தமிழின் தோழன்-}