யாழில் இப்படியொரு சம்பவமா? (Photo)

83

ஆசையாக வாங்கிய குச்சி ஐஸ்சினுள் இறந்த நிலையில் பல்லியொன்று அவதானிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் யாழில் இன்றைய தினம்(14) இடம்பெற்றுள்ளதாக எமது யாழ். மாவட்ட விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பான தகவல்கள் சமூக வலைத் தளங்களில் வேகமாகப் பரவி வரும் நிலையில் பலரும் கடுமையான எதிர்ப்புக்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

தற்போதைய வெப்பமுடனான காலநிலைக்கு மத்தியில் அனைத்துத் தரப்பினரும் குளிரான பானங்களை அருந்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் ஐஸ் வகைப் பொருட்களுக்குத் தற்போது மவுசு அதிகமாக காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

{தமிழின் தோழன்-}