பொள்ளாச்சி வழக்கு: பொலிஸாருக்கு கைமாறியது 60 இலட்சம்!

67

தமிழகம் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் பொலிஸாருக்கு 60 இலட்சம் கைமாறியுள்ளதாக செய்திக்கு வெளியாகியிருப்பது குறித்த வழக்கை மேலும் சர்ச்சைக்குள்ளாக்கியுள்ளது.

பொள்ளாச்சியில் கடந்த ஏழு ஆண்டுகளாக சுமார்-200 பெண்களை மிரட்டிப் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டு அதனை வீடியோவாக எடுத்துப் பெண்களை மிரட்டி வந்துள்ளனர்.

குறித்த விவகாரம் தற்போது தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில் இவ்வழக்கில் பொலிஸார் வசந்தகுமார், செந்தில், சதீஷ், திருநாவுக்கரசர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நாலவர் மீதும் குண்டாஸ் சட்டம் பாய்ந்துள்ளது.

குறித்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. இன்று அதிரடியாக சிபிசிஐடி திருநாவுக்கரசின் வீட்டில் சோதனை நடாத்தினர். இப்படியிருக்கையில் பொலிஸாருக்கு 60 இலட்சம் கைமாறியதாகப் பிரபல தனியார் செய்தி நிறுவனமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்கள் பின்வருமாறு,

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் பல பெண்கள் திருநாவுக்கரசு மற்றும் மூவரின் பிடியில் சிக்கியுள்ளனர். இதில் கல்லூரி மாணவிகள், ஆசிரியர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோர் அடக்கம்.

கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஸ்மார்ட்போனில் பல பெண்களின் வீடியோக்கள் உள்ளதாம். இந்த வீடியோக்கள் மூலம் பாதிக்கப்பட்ட பெண்களை கண்டறிந்து அவர்களிடம் வாக்குமூலம் பெற பொலிஸார் முடிவுசெய்துள்ளனராம்.

ஆனால், இந்த வழக்கில் தனது பெயர் இணைக்கப்படக் கூடாது எனப் பாதிக்கப்பட்ட மருத்துவர் நினைத்துள்ளார். இதனால், பொலிஸாருக்கு 60 இலட்சம் ரூபா கைமாறியுள்ளதாக அந்தச் செய்தி மேலும் தெரிவிக்கின்றது.

குறித்த செய்தி இந்த வழக்கை மேலும் சர்ச்சைக்குள்ளாக்கியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.