பிரேசில் பள்ளியில் மர்மநபர்கள் துப்பாக்கிச் சூடு: ஐந்து மாணவர்கள் பலி! (Video)

81

பிரேசில் நாட்டில் பள்ளியொன்றினுள் இரண்டு மர்மநபர்கள் புகுந்து சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடாத்தியதில் ஐந்து பள்ளி மாணவர்கள் உட்பட ஒன்பது பேர் பரிதாபகரமாகப் பலியாகினர். இந்தச் சம்பவத்தில் 17 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பிரேசில் நாட்டிலுள்ள ஆரம்பப் பள்ளியொன்றில் இந்தக் கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது.

முகமூடி அணிந்து கையில் துப்பாக்கியுடன் பள்ளிக்குள் நுழைந்த இரண்டு மர்ம நபர்கள் பள்ளிக்குள் நுழைந்து கண்மூடித்தனமாகச் சுட்டுத் தள்ளியதாகவும், இதன் பின் அவர்கள் தங்களைத் தாங்களே சுட்டுக் கொண்டு பலியாகிவிட்டதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

சுமார் நூறு மாணவர்கள் படித்துவரும் குறித்த பள்ளியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றதையடுத்துப் பள்ளிக்கு காலவரையற்ற விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பிரேசில் நாட்டில் இதுபோன்று அடிக்கடி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் நடைபெற்று வருவதால் அங்கு வாழும் மக்கள் பீதியில் உறைந்து போயுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.