யாழில் நாளை மின்தடைப்படவுள்ள பகுதிகள்

328

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை வியாழக்கிழமை(21)மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாளை காலை-08.30 மணி முதல் மாலை-05 மணி வரை யாழ். காங்கேசன்துறை,காங்கேசன்துறை கரிசன் ஐந்தாவது பொறியியல் படை முகாம்,காங்கேசன்துறை வடக்கு கடற்படை முகாம்,மயிலிட்டி, மயிலிட்டி கரிசன் ஐந்தாவது பொறியியல் படை முகாம்,மயிலிட்டி கரிசன் ஐந்தாவது பொறியியல் படை முகாம்(புதியது),தையிட்டி, வறுத்தலைவிளான்,வீமன்காமம்,பலாலி,பலாலி இராணுவத் தலைமைக் காரியாலயம்,பலாலி இலங்கை விமானப்படை முகாம், பலாலி விமானப்படை ஓய்வுகால விடுதி ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

(எஸ்.ரவி-)