யாழ். மாநகர முதல்வருக்கு கொலை மிரட்டல்!

102

யாழ்.மாநகர சபையின் முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் நபரொருவரால் தனக்குத் தொலைபேசியூடாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த-15 ஆம் திகதி தனது கைத்தொலைபேசிக்கு அழைப்பெடுத்த நபரொருவர் யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் கம்பன் விழாவுக்குச் செல்ல வேண்டாம் எனவும், தமது எச்சரிக்கையை மீறிச் சென்றால் அங்கு வைத்துக் கொலை செய்வோம் எனவும் தொலைபேசியூடாகத் தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக யாழ்.மாநகர சபையின் முதல்வர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தவரின் தொலைபேசி இலக்கத்தையும் அவர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

இதேவேளை,மேற்படி சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

{தமிழின் தோழன்-}