ஜெனீவாவில் நிறைவேறியது புதிய தீர்மானம்!!

248

ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான புதிய தீர்மானம் இன்றைய தினம்(21) ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

பிரித்தானியா மற்றும் அயர்லாந்து,ஜேர்மனி,கனடா,மொன்ரெனிக்கோ,மசிடோனியா ஆகிய நாடுகள் இணைந்து இலங்கையில் நல்லிணக்கத்தையும்,பொறுப்புக் கூறலையும் ஊக்குவித்தல் எனும் தலைப்பிலான 40/1 இலக்கத் தீர்மானத்தை முன்வைத்திருந்தன.

குறித்த தீர்மானத்துக்கு இலங்கை இணை அனுசரணை வழங்கியிருந்தது. இந்த நிலையில் தீர்மானம் மீது பேரவையில் தொடர்ச்சியில் விவாதம் நடாத்தப்பட்டது. இதில் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு உரையாற்றினர்.

இதனையடுத்து இலங்கையின் சார்பாக வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன உரையாற்றினார்.

இதனையடுத்துத் தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடாத்துவதற்கு எந்த நாடும் கோராத நிலையில் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது.