சூரிய மண்டலத்துக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட கோள்களின் எண்ணிக்கை தெரியுமா?

பூமியின் ஓர் அங்கமாகக் காணப்படும் சூரிய மண்டலத்துக்கு வெளியே இதுவரை நான்காயிரம் கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பூமியில் மட்டுமல்லாமல் விண்ணிலும் நிலைநிறுத்தப்பட்டுள்ள தொலைநோக்கிகள் மூலம் குறித்த கோள்கள் கண்டறியப்பட்டுள்ளன.

கடந்த-1992 ஆம் ஆண்டு அலெக்ஸ்சாண்டர் வோல்ஸ்சான் மற்றும் டேல் ஃபிரெய்ல் ஆகியோர் ஒரு நியூட்ரான் நட்சத்திரத்தைச் சுற்றி வரும் கோள்களைக் கண்டறிந்ததே நாம் வசிக்கும் சூரிய மண்டலத்துக்கு வெளியே கோள்கள் கண்டறியப்பட்டது முதன்முறையாகும்.

இதேவேளை,ஐரோப்பாவின்’தி எக்ஸோசோலார் பிளானட்ஸ் என்சைக்ளோபீடியா’இதுவரை நான்காயிரத்துக்கும் மேலான கோள்களை சூரிய மண்டலத்துக்கு வெளியே இருப்பதை உறுதிப்படுத்தி ஆவணப்படுத்தியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.