28 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி – சி45! (Video)

233

இந்திய ஆந்திர மாநிலத்திலுள்ள ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மைய ஏவுதளத்திலிருந்து இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி-45 எமிசாட் ராக்கெட் 28 செயற்கைக் கோள்களூடன் இன்று(01) காலை-09.27 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.

சுமார்-436 கிலோ எடை கொன்சடை இந்த ராக்கெட் இந்திய இராணுவத்தின் உளவுப் பணிப் பயன்பாட்டிற்காக செலுத்தப்பட்டுள்ளது. மினி செயற்கைக்கோள் எமிசாட்டும் இதனுடன் சேர்த்து விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

இந்த ராக்கெட்டில் அமெரிக்காவின் 24 செயற்கைக்கோள்கள், சுவிற்சர்லாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளிலிருந்து தலா ஒரு செயற்கைக்கோள் மற்றும் லுதுவேனியாவை சேர்ந்த இரண்டு செயற்கைக் கோள்கள் என நான்கு நாடுகளைச் சேர்ந்த 28 செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டுள்ளன.

இஸ்ரோ முதன்முறையாக ஒரே ராக்கெட்டில் மூன்று செயற்கைக் கோள்களை வெவ்வேறு புவி சுற்று வட்டப்பாதைகளில் நிலை நிறுத்தியுள்ளது.

தரையிலிருந்து 749 கிலோ மீற்றர் தொலைவில் எமிசாட்டும், 505 கிலோ மீற்றர் தூரத்தில் 28 அயல்நாட்டு செயற்கைக் கோள்களும் நிலை நிறுத்தப்பட்டுள்ளன.