பேஸ்புக் லைவ்விற்கு வருகிறது தடை!!

281

பேஸ்புக் லைவ் மூலம் குற்றச் செயல்களை நேரடி ஒளிபரப்பு செய்வது அதிகமாகியுள்ளமையால் இதனைத் தடுக்கும் நடவடிக்கையை அந் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

பேஸ்புக் லைவ் மூலம் கொலை,தற்கொலை உள்ளிட்ட குற்றச் செயல்களை நேரடி ஒளிபரப்பு செய்வது அதிகரித்துள்ளதால் பேஸ்புக் லைவ் வசதி நீக்கப்பட உள்ளது.

அண்மையில் நியூசிலாந்தில் கிறிஸ்ட்சர்ச் நகரிலுள்ள அல் நூர் மசூதியிலும், லின்உட் மஸ்ஜித் மசூதியிலும் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல் நடாத்தினர். இந்தத் துப்பாக்கிச்சூட்டில் 50 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

குறித்த தாக்குதலை நடத்திய கொலைகார ஆசாமி துப்பாக்கிச்சூடு காட்சியை தன் பேஸ்புக் பக்கத்தில் லைவ் வீடியோவாக ஒளிபரப்பினார். மசூதிக்கு காரில் வந்து இறங்கியதிலிருந்து ஒவ்வொருவரையும் சுட்டுத்தள்ளுவதை வரை லைவ் வீடியோவாக ஒளிபரப்பி மிரட்டினார்.

இந்த வீடியோவை ஒளிபரப்பிய சமநேரத்தில் 200 பேர் பார்த்துள்ளனர்.பேஸ்புக் பயனரொருவர் குறித்த வீடியோ தொடர்பில் புகார் வழங்கியதையடுத்து பேஸ்புக் அந்தப் பதிவை நீக்கியது.

ஆனால்,வீடியோ வெளியாகி 29 நிமிடத்திற்குள் இந்த வீடியோவை நான்காயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்து விட்டனர்.

பின் பேஸ்புக்கிலிருந்த அந்த வீடியோ ஏனைய இணையத் தளங்களில் பரவத் தொடங்கியது. இதனால்,பேஸ்புக் அபாயகரமான வீடியோவை தடுக்கத் தவறியதாகப் பலரும் குற்றஞ்சாட்டினர்.

இதேவேளை,கொடூரமான காட்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்தால் பேஸ்புக் லைவ் வசதியை நீக்குவதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.