விவசாய மாணவிக்கு இவ்வளவு சம்பளத்தில் வேலையா?: ஆச்சரியம் ஆனால் உண்மை!! (Photo)

450

பரம்பரை விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களே தற்போது விவசாயம் சம்பந்தப்பட்ட படிப்பைப் படிக்கத் தயக்கம் காட்டுகிறார்கள். இவ்வாறான படிப்புக்களை பலரும் கீழ்நிலையில் வைத்துப் பார்க்கிறார்கள்.

ஆனால், இந்தத் துறையை தேர்வு செய்து படித்தால் நிச்சயம் நல்ல எதிர்காலம் உண்டு என்ற நம்பிக்கையுடன் விவசாயத்துறையில் முதுநிலை படிப்பு படித்தார் பஞ்சாப்பைச் சேர்ந்த கவிதா என்ற மாணவி.

அவரது நம்பிக்கை வீண்போகவில்லை.படித்து முடித்தவுடனே கேம்பஸ் இண்டர்வியூவில் கனடாவைச் சேர்ந்த மாண்சாடோ என்ற விவசாயி நிறுவனமொன்றில் அவர் தேர்வு செய்யப்பட்டார்.

சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஆண்டுக்கு ஒரு கோடி ரூபா.

விவசாயப் படிப்பு படித்தால் வேலை கிடைக்காதென்ற நிலையில் ஒரு கோடி ரூபா சம்பளத்தில் கவிதா வேலையில் சேரவிருப்பது சக மாணவர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

கனடா உட்படப் பல்வேறு நாடுகள் விவசாயம் சம்பந்தப்பட்ட படிப்புகளை படித்தவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புக்களை வழங்கி வருவதால் இனிவரும் தலைமுறையினர்கள் இந்தப் படிப்பை அதிகம் தேர்வு செய்ய வாய்ப்பிருப்பதாக நம்பப்படுகிறது.