யாழ். அரியாலையில் ஆயிரம் மில்லியன் ரூபா செலவில் கண் வைத்தியசாலை

588

யாழ்.அரியாலையில் ஆயிரம் மில்லியன் ரூபா செலவில் கண் வைத்தியசாலை நிர்மாணிக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

புலம்பெயர்ந்து அமெரிக்காவில் வாழ்ந்து வரும் பாலேந்திரன் என்பவர் அரியாலைப் பகுதியிலுள்ள தனது இரண்டரை ஏக்கர் நிலத்தை புதிதாக கண் வைத்தியசாலை நிர்மாணிப்பதற்காக வழங்கியுள்ளார்.

மேற்படி காணியில் கண் வைத்தியசாலை நிர்மாணிப்பதற்காக ஆயிரம் மில்லியன் ரூபா நிதி தேவையெனக் கணக்கிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான மதிப்பீட்டு முன்மொழிவை நாம் அரசாங்கத்துக்கு அனுப்பி வைத்துள்ளோம் எனவும் தெரிவித்தார்.

{தமிழின் தோழன்-}