மீண்டுமொரு ஆட்சிக் கவிழ்ப்புக்குத் தயாராகும் மைத்திரி: கசிந்தது தகவல்!!

126

எதிர்வரும் நவம்பர்-டிசம்பர் மாதங்களுக்குள் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக தற்போதைய அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான மற்றொரு முயற்சியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொள்ளவுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போது ஐக்கியதேசியக் கட்சியுடன் இணைந்துள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஐக்கியதேசியக் கட்சியின் ஒரு பகுதி உறுப்பினர்களை இணைத்து 113 உறுப்பினர்களின் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்கும் திட்டமொன்று உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த திட்டத்துக்கு ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் இரண்டு உறுப்பினர்கள் மாத்திரமன்றி சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பலரும் ஆதரவளிப்பார்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, அண்மைக்காலமாக ஐக்கியதேசியக் கட்சியின் அமைச்சர்கள் சிலரைப் பாராட்டும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கருத்துக்களை வெளியிட்டு வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.