யாழ். குப்பிழான் சிவபூமி ஆச்சிரமத்தில் சித்திரைப் புத்தாண்டு விசேட வழிபாடுகள் (Video)

150

யாழ்.குப்பிழான் சிவபூமி ஞான ஆச்சிரமத்தில் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை(14) விசேட பூசை வழிபாடுகள் நடைபெற்றது.

காலை-08.15 மணி முதல் திருமுறை பாராயணம்,கந்தபுராண படன பாராயணம் என்பன நடைபெற்றன.

பிற்பகல்-01.12 மணியளவில் விகாரி வருடப் பிறப்பு உதயமான வேளையில் ஆச்சிரம முன்றலில் எழுந்தருளியுள்ள விநாயகப் பெருமானுக்கும், ஆச்சிரம மண்டபத்தில் எழுந்தருளியுள்ள சிவலிங்கப் பெருமான் மற்றும் ஈழத்து, இந்திய சித்தர்கள், ஞானிகளின் உருவப் படங்களுக்கும் விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து ஆச்சிரமத்தைத் தரிசிக்க வருகை தந்த அனைவருக்கும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டுக் கைவிசேடம் பரிமாறப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

{செய்தித் தொகுப்பு மற்றும் காணொளி:- எஸ்.ரவி-}