நாட்டு மக்களிடம் ஜனாதிபதி விடுத்துள்ள வேண்டுகோள்!

99

தமிழ்-சிங்கள சித்திரைப் புத்தாண்டின் மரக்கன்று நடும் சுபவேளை இன்றைய தினம்(15) இடம்பெறவுள்ளது.

இன்று முற்பகல்-11.17 மணிக்கு இந்த சுபவேளை உதயமாகிறது. மேற்படி சுபவேளையில் வெள்ளை நிற ஆடை அணிந்து கிழக்குத் திசை நோக்கி மரக்கன்று நடுவது சிறந்ததென ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, சுபவேளையில் மரக்கன்றொன்றை நட்டு எதிர்கால சந்ததியினருக்கும், சூழலுக்கும் தமது பிரஜைகள் என்ற பொறுப்பை நிறைவேற்றுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனைத்து இலங்கையர்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.