சித்திரைப் புத்தாண்டு நாளில் மயிலேறி அருள்பாலித்த நல்லைக் கந்தன் (Video)

156

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தில் விகாரி வருடப்பிறப்பை முன்னிட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை(14) காலை முருகப் பெருமானுக்கு விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து வள்ளி-தெய்வயானை சமேதரராக வேற்பெருமான் வெள்ளி மயில் மீதினில் உள்வீதி மற்றும் வெளிவீதியில் எழுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இவ்வாலயத்தில் நேற்றுக் காலை மற்றும் மதிய வேளைகளில் இடம்பெற்ற சித்திரைப் புத்தாண்டு விசேட பூசை வழிபாடுகளில் யாழ்.குடாநாட்டின் பல்வேறு பாகங்களிலிருந்தும், வெளியிடங்களிலிருந்தும் வருகை தந்த பல நூற்றுக்கணக்கான அடியவர்கள் பக்திப் பெருக்குடன் கலந்து கொண்டனர்.

புத்தாடைகள் அணிந்து வருகை தந்த அடியவர்கள் நல்லூர் முருகப் பெருமான் மீது பல்வேறு நேர்த்திகள் வைத்தும், வேண்டுதல்கள் செய்தும் வழிபடாற்றியமையை அவதானிக்க முடிந்தது.

ஆலயத்தின் முன்பாக நேற்றுக் காலை முதல் மாலை வரை அடியவர்கள் கற்பூரங்கள் ஏற்றியும், தேங்காய் அடித்தும் வழிபாடாற்றிய வண்ணமிருந்த காட்சிகளைக் காணக் கூடியதாகவிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

{செய்தித் தொகுப்பு மற்றும் காணொளி:- செ.ரவிசாந்-}
{படங்கள்:- ஐ. சிவசாந்தன்-}