யாழில் புத்தாண்டு தினத்தில் இளம் குடும்பஸ்தருக்கு நேர்ந்த கதி!!

225

யாழ்.பருத்தித்துறை கோழிக்கடைச் சந்திப் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் குடும்பத் தலைவரொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் சித்திரைப் புத்தாண்டு தினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை(14) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

குறித்த இளம் குடும்பஸ்தர் யாழ்.மந்திகையிலிருந்து பருத்தித்துறையிலுள்ள தனது வீடு நோக்கி நோக்கி மோட்டார்ச் சைக்கிளில் பயணித்துள்ளார். இந்நிலையில் பருத்தித்துறை கோழிக் கடைச் சந்தியை அண்மித்த போது மோட்டார்ச் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரமாகவிருந்த மின்கம்பத்திற்கும், மதிலுக்குமிடையே மோதி விபத்துக்குள்ளானது.

இந்தச் சம்பவத்தில் மோட்டார்ச் சைக்கிளைச் செலுத்திச் சென்ற இளம் குடும்பஸ்தரான ம.புவிகரன்(வயது- 38) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதேவேளை,மேற்படி விபத்துச் சம்பவம் தொடர்பாக பருத்தித்துறைப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

{தமிழின் தோழன்-}