உலகின் மிகப்பெரிய விமானத்தின் முதல் பயணம் ஆரம்பம் (Video)

170

இறக்கைகளுக்கிடையேயான தொலைவின் அடிப்படையில் உலகின் மிகப் பெரிய விமானமான ஸ்ட்ராடோலான்ச் தனது முதல் பயணத்தை ஆரம்பித்துள்ளது.

மைக்ரோசாஃப்ட் எனும் நிறுவனத்தின் இணை நிறுவனரான மறைந்த பால் ஆலனால் கடந்த-2011 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது ஸ்ட்ராடோலான்ச் நிறுவனம்.

இந்த விமானம் பறந்துகொண்டிருக்கும் போதே அதிலிருந்து விண்கலங்களை ஏவும் வகையில் குறித்த விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேற்படி விமானத்தை சுமார்-10 கிலோ மீற்றர் உயரத்திற்குப் பறக்கச் செய்து அதன் பின்னர் இதிலிருந்து விண்கலத்தை ஏவுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இந்த விமானத்திலுள்ள இரண்டு இறக்கைகளுக்கு இடையேயான தொலைவு மட்டும் 385 அடிகளாகும்.இது ஒரு கால்பந்து மைதானத்தின் நீளத்தை விட சற்றே அதிகமாகும்.

இந்த திட்டம் வெற்றியடையும் பட்சத்தில விண்கலங்களை பூமியின் நிலப்பரப்பிலிருந்து ஏவுவதைவிட விண்ணிலிருந்து ஏவுவது குறைந்த செலவுடையாக அமையுமெனக் கணிப்பிடப்பட்டுள்ளது.

இரு வேறு விமானங்களை ஒருங்கே கொண்டது போன்று ஆறு இன்ஜின்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த விமானம் தனது முதல் பயணத்தின்போது சுமார் 15 ஆயிரம் அடிவரை அதிகபட்சமாக மணிக்கு 274 கிலோ மீற்றர் வேகத்தில் பறந்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.