யாழில் சற்றுமுன் திடீர் மழை: பெரு மகிழ்ச்சியில் மக்கள்! (Videos)

524

யாழ்.மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நீண்டநாட்களுக்குப் பின்னர் இன்று செவ்வாய்க்கிழமை(16) பிற்பகல் கடும் மழை பெய்துள்ளது.

இன்று பிற்பகல்-01.15 மணிக்கு ஆரம்பித்த இந்த மழை வீழ்ச்சி சுமார் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக நீடித்துள்ளது.பாரிய இடி மின்னலுடன் இந்த மழை வீழ்ச்சி ஆரம்பமாகியிருந்தது.

யாழில் கடந்த பல நாட்களாக கடும் வெப்பமுடனான காலநிலை நிலவி வந்தமையால் பொதுமக்கள் நாளுக்கு நாள் பல்வேறு நோய்த் தாக்கங்களுக்கு ஆட்பட்டு வந்தனர்.

அத்துடன் கடும் வரட்சி காரணமாக பல்வேறு பகுதிகளிலும் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டிருந்ததுடன் விவசாய நடவடிக்கைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்றைய தினம் பெய்த திடீர் மழையால் வெப்பம் சற்றுத் தணிந்துள்ளது. இந்நிலையில் மழை காரணமாக யாழ். வலிகாமம் பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

{செய்தித் தொகுப்பு மற்றும் காணொளி:- செ.ரவிசாந்-}