அண்டத்தையே விழுங்கிவிடும் கருந்துளை: முதன்முறையாக ஆச்சரியத்தை ஏற்படுத்திய விஞ்ஞானிகள்!! (Video)

வானில் நிகழும் அதிசயங்களில் ஒன்றான கருந்துளை தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டு விஞ்ஞானிகள் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

நாம் வாழும் சூரியக் குடும்பம் உட்பட ஒட்டுமொத்த அண்டத்தையும் தனது ஈர்ப்பு சக்தியால் விழுங்கிவிடும் வல்லமை பெற்றவை கருந்துளை.

இதுதொடர்பாக வானியல் அறிஞர்கள் தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் முதன்முறையாக கருந்துளையை புகைப்படம் எடுத்து அதனை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.

இது விண்வெளி குறித்த ஆய்வில் மைல்கல் என்று கருதப்படுகிறது.

இந்தப் புகைப்படத்தில் கருப்பு நிற மையப்பகுதி, ஆரஞ்சு நிற வளையம் போன்ற பகுதி,வெள்ளைநிற வெப்பமான வாயு ஆகியவை இடம்பெற்றுள்ளன.

18 ஆம் நூற்றாண்டு முதல் கருந்துளைகள் தொடர்பாக வானியல் அறிஞர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். ஆனாலும், ஒருமுறை கூட தொலைநோக்கியில் கருந்துளை தென்படவில்லை. இந்நிலையில் தற்போது இரு கருந்துளைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அதிலொன்று M87 என்ற கேலக்ஸியிலிருந்து 50 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் காணப்படுகிறது. இதனைப் பல்வேறு ரேடியோ தொலைநோக்கிகள் உதவியுடன் படம்பிடித்துள்ளனர்.

குறித்த கருந்துளை காணப்படும் தொலைவை நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாதென பிரான்ஸ் நாட்டு வானியல் அறிஞர் பிரடெரிக் குத் தெரிவித்துள்ளார்.

மற்றொரு கருந்துளை சகிட்டரியஸ் ஏ* ஆனது நாம் வாழும் புவியிலிருந்து 26,000 ஒளி ஆண்டுகள் தொலைவிலுள்ளது. நாம் வாழும் பால்வளித்திரளின் மையப்பகுதியில் உள்ளது. இது ஈவண்ட் ஹாரிசன் டெலஸ்கோப் மூலம் படம் பிடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த நிகழ்வு அற்புதமான விஞ்ஞான சாதனை என ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி வானியல் அறிஞர் பால் மெக்நமரா தெரிவித்துள்ளார்.