யாழ். போதனா வைத்தியசாலை இரத்த வங்கிப் பிரிவு விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்

314

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு ஏ நெகடிவ்(A neg), ஓ நெகடிவ் (O neg) குருதி வகைகள் மிகவும் அவசரம் தேவையாகவுள்ளதாக வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

எனவே,மேற்படி குருதி வகையையுடைய குருதிக் கொடையாளர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவுக்குச் சமூகமளித்து உயிர்காக்கும் உன்னத பணிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதேவேளை, இதுதொடர்பான மேலதிக விபரங்களுக்கு 0772105375 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் கேட்கப்பட்டுள்ளது.

{எஸ்.ரவி-}