பெற்றோரைப் பொல்லால் தாக்கிய மகள்: தாயார் உயிழப்பு! (Photo)

126

கஹவத்த– மடலகம பகுதியில் மகளொருவர் தமது பெற்றொரைப் பொல்லால் தாக்கிய நிலையில் 52 வயதான தாயார் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த பெண்ணின் பெற்றோர் கஹவத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.இந்த நிலையிலேயே தாயார் உயிரிழந்துள்ளார்.

மேற்படி கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவர் மனநலம் பாதிக்கப்பட்டவரெனப் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, மேற்படி சம்பவம் தொடர்பாக கஹவத்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.